புனரமைக்கப்பட்ட இரணைமடுக்குளத்தில் சிறு போக நெற் செய்கை கேள்விக்குறி நிலையில்

கிளிநெச்சி இரணைமடுக்குளத்தில் நீர்மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் நெற்செய்கை கேள்விக்குறியாகிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் இரணைமடுக்குளத்தில் நெற் செய்கை 30 அடியாக சேமிக்கப்படுகின்ற போது பெப்பரவரி மார்ச் காலங்களில் நீர் மட்டம் 24 அடியாக காணப்பட்டுள்ளதுடன் 8000 ஏக்கர் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இரண்டு வரட காலமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு 36 அடியாக உயர்த்தப்பட்ட போதும் பருவ மழை போதுமானதாக இல்லாமையால் புனரமைக்கப்பட்ட குளத்தில் போதுமான நீர் சேமிக்கமுடியாத நிலையில் தற்போது 16.6 அடியே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இன்னிலை தொடருமானால் நெல் விதைப்பு சாத்தியப்படாது போய்விடும் என நீர்ப்பாசன வியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்