திருடர் தலைவரிடம் திருடரை பிடிக்கும் பதவி : மக்களை கோமாளிகளாக்கிய ஜனாதிபதி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் பிரசார மேடைகளில் பிரதமர் ரணில் திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது திருடர்களை பிடிக்கும் கடமையை அந்தத் திருடனான பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துள்ளார் என்பது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியாக எழுந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் பெறுபெறுகளினூடாக பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், அவரது பதவியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி அந்தப் பிரதமருக்கே வழக்கப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதி எடுத்த முயற்சிகளுக்கான தோல்வியா அல்லது மக்களை கோமாளிகளாக நினைத்துள்ளாரா என்பது விடைகாணப்படவேண்டிய கேள்வி.

இருந்தும் தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக திருடர்களை பிடிக்கும் பொறுப்பை திருடர் தலைவரான பிரதமரிடம், ஜனாதிபதி வழங்கியுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் தற்போது பிரதமருக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். தொடர்ந்து ராஜபக்சர்களை பாதுகாப்பதாக பிரதமர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு இம்முறை பதிலளிக்கும் பொறுப்பு பிரதமருக்கு ஏற்பட்டுள்ளதெனவும் மறுபக்கம் சிந்திக்கத் தோன்றுகின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்