நேற்று கண்டியில் சிங்கள மற்றும் முஸ்லிம் இனக்கலவரம்!!

கலவரத்துக்கு காரணம் யார்?

நேற்று கண்டியில் கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் குழு ஒன்றின் தாக்குதலில் சிங்கள இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத்தொடர்ந்தே இவ்வாறான தாக்குதல் இடம் பெற்றுள்ளது. சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கான இன மோதல் தொடர்ந்தும் உச்சநிலைக்குச்சென்றுள்ளது.

இதனால் வன்முறை மேலும் பரவாமல் இருக்க பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை பிறப்பத்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்ட எம்.ஜி.குமாரசிங்க எனும் 41 வயதான பாரவூர்திச் சாரதி கண்டி போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை தொடர்பிலேயே இக்கலவரம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்தக்கலவரத்தின் பின்னர் சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களின் இரண்டு முஸ்லிம் பள்ளிசாசல்கள் உட்பட வீடுகள் , மற்றும் கடைகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளனர்.

மேலும் அம்பாறையிலிருந்து வந்த பேருந்து ஒன்றும் வளிமறித்தத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்துக்கு தடை விதிப்பு

கடந்த ஞாயிற்றக்கிழமை இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தினை அடுத்து சிங்கள இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .

மேலும்  உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெறவுள்ள நிலையில் ஏற்கனவே முஸ்லிம் கடைகளில் உள்ள பதற்ற நிலையால் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

அத்தடையையும் மீறி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலம் இடம் பெற்றுள்ளது. அதே நேரம் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை விடுவிக்கக்கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிசாரால் முயன்றும் பலன் அளிக்கவில்லை.

கண்ணீர் புகைக்குண்டு களை வீசியும் பலன் அளிக்காத காரணத்தினால் நேற்று மாலை பொலிசார் ஊரடங்குச்சட்டத்தை பிறப்பித்தள்ளனர்.
மேலும் பல பொலிசார் கண்டிமாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவதற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் இடம் பெற்றமைக்கான காரணம்

கடந்தமாதம் பாரவூர்தி ஒன்று பின்னோக்கி (றிவேர்ஸ்) செலுத்தியமையால் இடம் பெற்றுள்ள விபத்து ஒன்றே இக்கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
பின்னோக்கி செலுத்தப்பட்ட பாரவூர்தி பின்னால் நிறுத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டியில் முட்டி மோதியமையால் பக்கக்கண்ணாடி சேதமாகியது.

இதன் காரணமாக சிங்கள இளைஞன் இளப்பீடாக ஒரு தொகைப்பணத்தை முஸ்லிம் இளைஞர்களிடம் வளங்கினார்.

இதனைத்தொடர்ந்து பாரவூர்திச்சாரதியான சிங்கள இளைஞர் அம்பல பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் போதே முஸ்லிம் இளைஞர்கள் அவரை பின்தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வைத்து அவரைத்தாக்கியுள்ளார்கள். இத்தாக்
குதலில் பாரவூர்திச்சாரதி காயங்களுக்கு உள்ளாகி கண்டி போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தெல்தெனிய பொலிசார் சந்தேகத்தின் பேரில் 4 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களை தெல்தெனிய நீதிமன்றத்தில் விளக்க மறியலில் வைத்தனர்.
தாக்குதலில் படுகாய மடைந்த பாரவூர்திச்சாரதி எம்.ஜி.குமாரசிங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாரதி உயிரிழந்தமை தொடர்பாக அப்பிரதேசம் எங்கும் பரவியுள்ளது. இதன் மூலமாகவே இவ் இனக்கலவரம் இடம் பெற்றுள்ளது.

ஊரடங்குச்சட்டம் அமுலாக்கம்

கண்டியில் ஏற்ப்பட்ட கலவரத்தினை கட்டுப்படுத்த முடியாத பொலிசார் ஊரடங்குச்சட்டத்ததை பிறப்பித்தள்ளனர். நேற்று மாலை 3.00 மணியளவில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் 15 மணித்தயாலங்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலவரத்தை அடக்க பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும்  கலவரத்தை அடக்க முடியாத காரணத்தால் ஊரடங்குச்சட்டத்தை பிறப்பித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டதுடன் வெளிமாவட்டத்தக்கு சென்றவர்களும், வெளிமாவட்டத்திலிருந்து கண்டிக்கு வருகை தந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்