சுதந்திரக்கிண்ண முக்கோணத்தொடர் கிரிக்கட் போட்டியில் 5 விக்கட்டுகளை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிதாகஸ் முக்கோணத்தொடர் கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி நேற்று இரவு 7.00மணிக்கு ஆரம்பமானது. இதில் இலங்கையணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி களத்தடுப்பினை மேற்கொள்ளத்தீர்மானித்தது.

இதன்படி இந்திய அணி துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களைப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஆட்ட நாயகனாக குசல் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்