புகையிலையை கைவிட்டு கஞ்சாவை பயிரிடுங்கள் – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சுமந்திரன் எம்.பி ஆலோசனை!

கஞ்சாச் செடியை விட புகையிலை மிக மோசமானதாக்கத்தை ஏற்படுத்தவல்லது. எனவே புகையிலைச் செய்கையை கைவிடுங்கள். புகையிலையை விட கஞ்சாச் செடி நன்மையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடமராட்சி  தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேசத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் புகையிலை தடை தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போதே குறித்த கருத்தை எம்.பி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தெர்டர்பில் மேலும் தெரியவருவதாவது –

யாழ்ப்பாண விவசாயிகளின் பணப்பயிரான புகையிலையை தடைசெய்யுமாறு அரசு அறிவித்திருந்ததுடன் அது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வரவுள்ள  நிலையில் குறித்த தடையால் பாதிக்கப்படும் புகையிலை செய்கையாளர்களுக்கு மாற்றீட்டு பயிராக இதுவரை எந்தவிதமான ஒரு தீர்வும் கொடுக்கப்படாத நிலையில் இன்றையதினம் வடமராட்சி  தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேசத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் பெரும் சர்ச்சையான விடயமாக காணப்பட்டது.

இதற்கு பதிலளித்த எம்.பி, புகையிலைச் செடியால் தான் யாழ்ப்பாணத்து மக்களுக்கு அதிகளவான நோய்கள் வருவதாக வலியுறுத்தியதுடன் குறித்த பயிர்ச்செய்கையை உடன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் குறித்த பயிர்ச்செய்கைக்கு மாற்றீடாக கஞ்சாப் பயிரை செய்யலாம் என்ற தோரணையில் அடிக்கடி கஞ்சாச் செடி தொடர்பாக குறித்த கூட்டத்தில் கூறியிருந்தமையானது அங்கிருந்த இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட  பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் கஞ்சா போதைப்பொருள் கடத்தல்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டும் பலர் கைதுசெய்யப்பட்டும் வரும் நிலையில் இதற்கு அரசியல் பின்புலம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டும் வந்திருந்த நிலையில் இன்று எம். பி. சுமந்திரன் இவ்வாறு கஞ்சா செடி தொடர்பில் அடிக்கடி முன்னிலைப்படுத்தி பேசியிருப்பதானது அங்கிருந்த பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்