பதவி துறக்கிறார் எம்.பி. மாவை !

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வுள்ளார் எனசெய்திகள் வெளியாகியுள்ளன.

வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்காகவே இந்த பதவி  துறப்பு உன தெரியவருகின்றது.

கட்சியின் உயர்மட்டத்திலுள்ள இரண்டு பிரமுகர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட கலந்துரையாடலின் முடிவில் மாவை இந்த முடிவை எடுத்துள்ளார். பதவியை துறப்பதற்கான முன்னாயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

எம்.பி ஒதுக்கீட்டு பணங்களில் முடிக்ககூடிய அபிவிருத்தி பணிகளை அவசரகதியில் முடித்தால், மாகாணசபை தேர்தலில் பலன் கிடைக்குமென்பதால், அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இதேவேளை, மாகாணசபை தேர்தலை கணக்கிட்டு, இன்னுமொரு நகர்வையும் மாவை அணி செய்துள்ளது. கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலன் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சமாளித்து, வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்த மாவை திட்டமிட்டுள்ளார்.

இதன்படி மாவையின் அலுவலக செயலாளரான பிருந்தன் என்பவர் சில தடவைகள் அருந்தவபாலனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களிற்கு முன்னர் மார்ட்டின் வீதி, தமிழரசுக் கட்சி தலைமையகத்திற்கு அருந்தவபாலன் சென்று இரகசிய பேச்சில் ஈடுபட்டார்.

இந்த பேச்சில் சில இணக்கங்கள் எட்டப்பட்டுள்ளன. மாவை பதவி விலகியதும், அந்த வெற்றிடத்திற்கு அருந்தவபாலன், எம்.பியாக நியமிக்கப்படுவார். இதனால் அவசரப்பட்டு கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க வேண்டாம் என மாவை தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதை அருந்தவபாலனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அண்மையில் தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் அருந்தவபாலன் கலந்து கொள்வார் என முதலமைச்சர் அறிவித்தபோதும், அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த பேச்சுக்கள் சுமுகமாக முடிந்ததையடுத்தே, அவர் தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தை தவிர்த்தார்.

மாவை தரப்பிலிருந்து இந்த டீலை முடித்தவர்கள் மூவர். பிருந்தன், சுகிர்தன் (வலி வடக்கு தவிசாளர், மாவையின் தனிப்பட்ட செயலாளர்) மாவையின் மகன் கலையமுதன் ஆகியோரே. எனினும், முதலமைச்சர் வேட்பாளர் யாரென்பதை இறுதியில் தீர்மானிக்கும், இரா.சம்பந்தனிற்கு இந்த விசயங்கள் எதுவும் தெரியாதுஎன்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்