யாழில் 80 இலட்சம் ரூபாய் கொள்ளை தொடர்பில் நான்கு அதிகாரிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் அரச வங்கி ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ள பணம் காணாமல் போனமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்று அரச அதிகாரிகள் நால்வர்மீது புகார் தெரிவித்துள்ளது.

வங்கிக்கு கொண்டு சென்றுள்ள 11,074,000 ரூபா பணத்தில் 8,020000 ரூபா காணாமல் போயுள்ளமை தொடர்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9 ஆம் திகதி அனுராதபுரம் வங்கியிலிருந்து யாழ்ப்பாணம் வங்கிக்கு இந்தப்பணம் கொணடு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் பணத்தை கொண்டு செல்லும் போது தேனீர் அருந்துவதற்காக வாகனத்தை இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போதே இத்திருட்டுச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
தேனீர் அரந்திவிட்டு வந்து பார்க்கும் போது பணம் இருந்த 2 பைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணப்பைகள் இரண்டையும் யாராவது திருடிச்சென்றிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைக்கு அமைய பணம் கொண்டு சென்ற அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்