இலங்கையில் தென்பகுதியில் தாழமுக்கம்

இலங்கையின் வளிமண்டலவியலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையானது நாட்டின் தென்பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வழிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மென்மேலும் வலுவடைந்த நிலையில் மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான அரேபியக்கடலை நேக்கி நகர்ந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தீவின் மத்திய பகுதிகளினை சூழவுள்ள பகுதிகளில் உள்ள கடற்பரப்புகளில் இடியுடன்கூடிய மழை பெய்யகூடும் என அறிவிக்கப்பட்டள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வழிமண்டலவியல் திணைக்கள வானிலை அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை எடுத்துக்கூறியுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்