இணையத்தளத்துக்கு சுதந்திரமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் ஆதரவளிப்பதாக தெரிவிப்பு

இலங்கையில் சுதந்திர இணையதள பிரவேச்துக்க ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு அளிப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேஸ்புக் , வட்ஸ் அப் உள்ளிட்டசமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எழுதப்பட்ட கேள்விக்கு பேச்சாளர் டுஜாரிக் பதில் வளங்கியுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் துறை உதவி பொதுசெயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மன், சமுக வலைத்தளங்களுக்கான தடைகள் குறித்து அவதானம் செலுத்தினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது
இது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், ஆனால் இணையத்தளத்துக்கு சுதந்திரமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்