ஆசிரியர்கள் இடம் மாற்றம் தொடர்பான அறிவித்தல்!

ஒரே பாடசாலையில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக தரம் 6 ஆண்டு தொடக்கம் 11 வரை கல்வி கற்பித்த 5473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மூன்று கட்டங்களில் இடம்பெறும் இவ் ஆசிரிய இடமாற்றத்தில் முதல்கட்டம் கடந்த வருடம் கடந்த வருட இறுதிப்பகுதியில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் உயர்தரப்பரீட்சையில் உயர்தர வகுப்புக்களில் ஆசிரியர்களாக பணியாற்றிய இரண்டாயிரத்து 590 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
இரண்டாம் கட்டம் இவ்வருடத்தின் முதல் பகுதியில்; ஆரம்பிக்கப்பட்டது. இதில் தரம் ஒன்றுக்கும், ஐந்துக்கும் இடைப்பட்ட வகுப்புகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிய ஆயிரத்து 441 ஆசிரியர்களில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த ஆண்டில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்