முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அம்பாறை , மற்றும் கண்டி மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச்சம்பங்களுக்கு எதிர்ப்புத்ததெரிவித்து இன்று செவ்வாய்கிழமை மாபெரும் கண்டனப்பேரணி ஒன்று யாழ் பஸ்தரிப்பிடத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.15 மணிமுதல் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கண்டனப்பேரணியில் தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்களுக்கான உறவை வலுப்படுத்தி ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெகுஜன அமைப்பக்கள் பல இதற்கு ஆதரவு செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்;டோர் இனவாத வன் செயலுக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்