சிகிரியா குகை பற்றிய முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளன.

சிகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்களினை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழ்வாராட்சிகள் சிகிரிய கற்களை மையமாகக்கெகாண்டு அதன சுற்றியோடும் நீர்வீழ்ச்சிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அகழ்வு நடவடிக்iயின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.

அதன்படி சிகிரிய கட்டடக்கலை தொடர்பான ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மரங்களின் கலப்புடன் உள்ள களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்