மீனின் விலை சற்று உயர்வு!

தற்போது இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாகவும் கடல் கொந்தளிக்கின்ற நிலை காணப்படுவதனாலும் ஆழ்கடல் மீன்பிடி தடுக்கப்பட்ட நிலையில் கடல் உணவுகளின் வருகை குறைவடைந்த நிலையில் அவற்றுக்கான விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மற்றும் தீவகப்பகுதி, வடமராட்சி, போன்ற பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு நிலை காணப்படுவதால் ஆழகடல்மீன்பிடியை மீனவர்கள் தவிர்த்துள்ளனர். இதனாலேயே கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளது.

வடமராட்சிப்பகுதிகளிலிருந்து யாழ்ப்;பாணத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள மீன்களது விலையும் அதிகமாக காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறை, கல்வியங்காடு மீன் சந்தைகளில் கடலுணவுகளின் விலைகளும் அதிகரித்துக்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்