இனமுறுகல் தொடர்பாக தாம் இறுக்கமான கொள்கையினை பின்பற்றுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு!

கண்டியில் இடம்பெற்றுள்ள இன முறுகல் தொடர்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் அரசு தடைவிதித்த நிலையில் இனமுறுகல் தொடர்பாக இறுக்கமான கொள்iயை தாம் பின்பற்றியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் வாழும் அனைவரும் பேஸ்புக்கை பார்வையிட முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாளைய தினம் கொழும்பில் அரச அதிகாரிகளினூடான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்