காணிகளை விடுவிக்க முடியாது என  கடற்படை அறிவிப்பு :மக்கள் வீதிகளில் – மௌனம் காக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் 200 ஏக்கர் காணியை விடுவிக்க கடற்படை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனாலும் இந்த விடயம் தொடர்பில், கடற்படை பேச்சாளரை அந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

இந்த முகாமிற்காக சுவீகரிக்கப்பட்ட காணியை மீண்டும் விடுவிக்கும் வகையில் எந்த தீர்மானங்களும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த கடற்படை முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், காணியை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்