ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் ரத்து

ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையால் ஐக்கிய நாடுகள் சபையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற விருந்தது.

பிரதான நிகழ்வுகள் இடம்பெறாத போதிலும், இன்றைய தினத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஏனைய பக்க நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என மனித உரிமைகள் பேரவையின் பொது தகவல் அதிகாரி ரோலண்டோ கோமஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்