பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் 40 பேர் கைச்சாத்து

பிரதமர் ரணில்விக்கிரம சிங்கா மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையில் 40 பேர் கையெழுத்த இட்டுள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்கத்தில் உள்ள சிலரும் இதில் கையெழுத்திட உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள 14 விடயங்களுள், 12 விடயங்கள் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்