VPN செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!!

VPNசெயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN செயலி பாவனையாளர்கள் அதிகமாயுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

VPNபயன்படுத்தியமையினால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள VPN செயலியை (App) அழித்து விடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்