தமது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பணிப்புறக்கணிப்பை கைவிடுவதில்லை என பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தெரிவிப்பு

வேதன உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு, இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் கல்விச்செயற்றபாடுகளை முன்னெடுப்பதில் பாதிப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதே வேளை பணிப் புறக்கணிப்பை நிறைவு செய்து மீண்டும் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் விடுததுள்ளது.

இன்னிலையில் இக்கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்காலத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்