எதிர் வரும் 17 ஆம் திகதிக்கு முன் கடமைக்கு திரும்பாத பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் 17 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) க்கு முன் கடமைக்கு திரும்பாத பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது அன்றைய தினத்திற்குள் கடமைக்குத்திரும்பாத கல்விசாரா தகுதிகாண், சமய, தற்காலிக இடமாற்று, ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட சகலரும் கடமையில் இருந்து நீங்கியதாக கருதப்படும் என உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே போல நிரந்தர ஊழியர்கள் இன்றைய தினத்துக்குள் கடமைக்குத்திரும்பாது விடின் தொடர்ந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின கடமையிலிருந்து பகிஷ்கரிக்கும் நாட்களை சம்பளம் இல்லாத காலப்பகுதியாக கருதப் போவதாகவும் உயர்கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல வாரங்களாக கடமைகளை பகிஷ்கரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த அரசாங்கம் சம்பள அதிகரிப்பு பற்றிய தீர்மானங்களை எட்டியிருந்தது. இது பற்றி பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் உயர்கல்வி அமைச்ச குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்