யாழ் மாநகர சபை புதிய கட்டட தொகுதியின் பின்புறமாக உள்ள கழிவு நீர் வாய்க்காலில் பாலம் அமைக்க அனுமதி கொடுத்தது யார்? – மக்கள் கேள்வி!

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் நகரப் பகுதியின் புதிய மாநகர சபை கட்டடத்திற்கு பின்புறமாக உள்ள கழிவு நீர் வாய்க்காலில் தனி நபரது இரண்டு கடைகளை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பாலமானது யாழ் மாநகரின் அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டதா அல்லது தன்னிச்சையாக மாநகரின் அதிகார வர்க்கத்தினருடைய தயவுடன் அமைக்கப்பட்டுள்ளதா என கடைத்தொகுதி உரிமையாளர்களும் பொதுநலன் விரும்பிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ் மாநகரின் ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்தி ஊழலற்ற தூய்மையான சபையாக ஆட்சியை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமையானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமையை மக்கள் காணமுடியாதவாறு பிரதான வீதியோரத்தில் குறித்த பாலத்தின் பார்வை மக்களுக்கு படாத வகையில் தகர வேலி போடப்பட்டு மறைப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு கடைத்தொகுதிகளை இணைப்பதாக இப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரின் ஆட்சி நீண்டகாலமாக ஆணையாளரின் கைகளுக்குள் இருந்த நிலையில் தற்போது  ஒரு மாதமே ஆட்சி அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது கரங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாழ் மாநகர சபையே… யாழ் மாநகர சபையின் ஆணையாளரே மக்களிடம் இன்று எழுந்துள்ள குறித்த சந்தேகத்திற்கு தாங்கள் வெளிப்படையான பதிலை வழங்கவேண்டும் எனவும் இது விடயத்தில் யாழ் மாநகரசபை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதுமே மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்