80 தங்க பதக்கங்களுடன் சாதனை படைத்தது அவுஸ்ரேலியா!

21 ஆவது பொது நலவாய விளையாட்டு விழாவின் 11 ஆவது நாளான இன்றுடன் அவுஸ்ரேலியா 80 தங்க பதக்கங்கள் உட்பட 197 பதக்கங்களை பெற்ற தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவுஸ்திரேலிய நாட்டின் போட்டியாளர்கள் 80-தங்கம், 58-வெள்ளி, 59-வெண்கலம் அடங்கலாக 197 பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து 45-தங்கம், 45 -வெள்ளி, 46-வெண்கலம் அடங்கலாக 136 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 26-தங்கம், 20-வெள்ளி, 20-வெண்கலம் அடங்கலாக 66 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இப்போட்டியில் இலங்கை 31ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்