மோசடி செய்ய மேலும் ஒருவருடம் சேவை நீடிப்புக் கோரும் அதிபர் : சாவகச்சேரி பிரபல பாடசாலையில் சம்பவம்!

சாவகச்சேரி நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் குறித்த பாடசாலையின் அசையும் சொத்து மற்றும் நிதி உள்ளிட்ட பலவற்றை மோசடி செய்துள்ளார் என குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களாலும் பெற்றோராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறும் செல்லும் வயதை எட்டியிருந்தும் தனது பதவியை மீண்டும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதானது அவரது மோசடிகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையே என பாடசாலை சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

சாவகச்சேரி நகரின் மையப் பகுதியில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலையின் சொத்துக்களை சூறையாடுவதுடன் பாடசாலையிலுள்ள வளங்கள் எல்லாவற்றையும் தனது வீட்டுக்கு பாடசாலையின் சிற்றூழியர் ஒருவரது உதவியுடன் தனது வீட்டுக்கு கொண்டு செல்கின்றார் என பரவலாக மாணவர் மற்றும் பெற்றோரால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அத்துடன் பாடசாலையின் வளாகத்திற்குள் தனது சிறியரக உழவு இயந்தியரம் ஒன்றையும் எந்நேரமும் நிறுத்தி வைத்திருக்கும் குறித்த அதிபர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பொருட்களை வெளியேற்றுவதாகவும் பல போலி சிட்டைகளை தயாரித்து பாடசாலை நிதிகளை முறைகேடு செய்து வருவதாகவும் பழைய மாணவர்கள் குற்றம்  சாட்டுகின்றனர்.

இவரது இந்த மோசடிகளை தொடர்ச்சியாக செய்வதற்காக தற்போது ஓய்வு பெற்று செல்லும் வயதை அடைந்துள்ள  நிலையிலும் அதனை மேலும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பு செய்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

இதற்காக சட்டவிரோதமான முறையில் ஆசிரியர்களிடம் கையொப்பம் வாங்கி கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள இவர் தனது பதவியை எப்படியாயினும் இன்றும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த  பழைய மாணவர்களும் பெற்றோரும் பலமுறை துறைசார் தரப்பினரிடம் முறையீடு செய்தும் அவர்கள் அவர் மீது எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாதிருப்பதுடன் அவரது மோசடிகளுக்கு மேலும் களம் கொடுக்கும் முகமாக மேலும் ஒரு வருடம் பதவி வழங்க முன்வந்துள்ளமையானது பாடசாலைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதுடன் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறித்த பாடசாலை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கின்றது.

அதிபரது குறித்த மோசடிகளால் பல ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்ட சம்பவங்களும் இங்கு நடைபெற்றுள்ளதாகவும் மாணவர்கள் கூட அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

இந்நிலையில் பாடசாலையின் நலன்களை கருத்திற்கொண்டு கல்வித் திணைக்கள அதிகாரிகள் குறித்த பாடசாலை அதிபர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளாதுவிடினும் சேவை நீடிப்பையாவது தடுத்து நிறுத்தி பாடசாலையை காப்பாற்றுமாறு பாடசாலைச் சமூகம் வேண்டி நிற்கிறது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்