அமெரிக்காவில் நடுவானில் வெடித்தச்சிதறிறது விமான இயந்திரம்!

அமெரிக்காவில் நடுவானில் விமான இயந்திரம் ஒன்று வெடித்துச்சிதறியுள்ளதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இருந்து டல்லாஸ் நகருக்கு 149 பயணிகளுடன் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் சென்றுள்ள அதே வேளை இயந்திரம் வெடித்துச்சிதறியுள்ளதால் இதன் இறக்கைகளிலும் துளைகள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்த காணமாக ஜன்னல் கண்ணாடி ஒன்ற வெடித்துச்சிதறியுள்ளதால் ஜன்னல் ஓரத்தில் இருந்த பெண் விமானத்திற்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும், விமான இயந்திரம் வெடித்ததில் பறந்து வந்த உலோக துண்டு ஒன்று பெண்ணை தாக்கியதில் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இவ்விபத்தின் போது மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகவும், விமான இயந்திரம் வெடித்ததால் பிலடெல்பியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து விசாரணைகளும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்