லங்கன் பிரிமியர் லீக் போட்டித்தொடர்கள் எதிர்வரும் ஓகஸ்டில் ஆரம்பம்….!!

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘லங்கன் பிரிமியர் லீக் போட்டித்தொடர்கள் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நடைபெற்று வரும் பிரிமியர் லீக் தொடர்கள் போலவே இத்தொடரிலும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச்சேர்ந்த பிரபல்யம் மிக்க வீரர்களினை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிரவாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தொடரில் 6 அணிகள் பங்குபற்றுவதாகவும் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளை தலா இருமுறை எதிர்த்து விளையாடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்