அமைதியாக இருக்கும் கந்தனையும் இலஞ்ச ஊழலில் சிக்கவைக்கும் அரசியல்வாதிகள்!

தமக்கான அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அமைதியாக இருக்கும் கந்தனையும் இலங்கை அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள பலர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு அமைச்சு பதவி கிடைக்க கதிர்காம கந்தனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கான விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டு விடுமுறை தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்காமத்தில் பூஜை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் கோயிலின் பின் பக்க கதவின் ஊடாக நுழைந்து தங்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவி கிடைக்க வழி செய்யுமாறு ஆலயத்தின் பூசாரியிடம் கோரியதாக தகவல் வெளியாகி உள்ளன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்