சீனாவின் கடன்சுமையால் இலங்கையில் டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கையில் நேற்றைய தினமும் (திங்கட் கிழமை) டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இணையதளம் ஒன்றே இவ் அறிக்கையினை வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய நாள் நிறைவின் போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி156ரூபா 90 சதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 65 சத வீழ்ச்சியாக இதுபதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதியாளர்களின் கேள்விக்குறைவே இதற்கான காரணம் என்று சந்தைத் தரப்புக்கள்சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், சீனாவின் கடும் கடன்சுமையில் உள்ள இலங்கையில் டொலருக்கான ரூபா பெறுமதியில்வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக அவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

மேலும் சீனாவின் பாரிய முதலீட்டிலான திட்ட கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணயஒதுக்கத்தின் வீழ்ச்சி என்ற இரண்டு பாரிய பொருளாதார பிரச்சினைகள் இலங்கையில்உள்ளதாக அந்த இணையதளம்; மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சைலீஸ்குமார் என்ற ஈரோ ஏசியாவின் தென்னாசிய பொருளாதார ஆய்வாளரை சுட்டிக்காட்டியேமேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்