யாழ். நாவற்குழியில் வீதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!

சற்றும் எதிர் பாராத வகையில் மன்னார் பிரதான வீதியில் உள்ள நாவற்குழி பகுதியில் இடம் பெற்றுள்ள வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ர்ள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளியில் சென்றுக்கொண்டிருந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத.

சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்