போலித்தகவல் பரவுகிறது முகநூலில்… பாவனையாளர்களே கவனம்!!

இலங்கையர்களினை இலக்கு வைத்து முக நூல்களில் போலித்தகவல்கள் பரப்பபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் பரபலமான மோட்டார் நிறுவனமான Audi இன் வர்த்தக சின்னத்தை பயன்படுத்தி பேஸ்புக் ஊடாக போலித் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்தே இலங்கையர்கள் ஏமாற்றமடையவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி தகவலில் Audi மோட்டார் நிறுவனத்தின் 110 ஆவது வருடத்தை முன்னிட்டு 5 மோட்டார் வாகனங்களை பரிசாக வழங்கவுள்ளதாகவும், அதற்கான போட்டியில் இணையுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக பேஸ்புக் பக்கத்திற்கு விருப்பம் வெளியிடுமாறும், நீங்கள் விரும்பும் மோட்டார் வாகன நிறத்தை பதிவு செய்து பகிருமாறு கோரப்பட்டுள்ளது.

அவர்களில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் 5 பேருக்கு பெறுமதியான Audi மோட்டார் வாகனம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்