க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

இலங்கையில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் , சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், அந்தக் காலம்வரை இதற்கான விண்ணப்பத்தினை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொணடுள்ளார்

இதேவேளை, தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள நிலையில், பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்