கால்ப்பந்து வீரர் மெஸ்சி பெறும் சம்பளம் ஒரு நிமிடத்தில் எவ்வளவு தெரியுமா?

உலகில் தலைசிறந்த காற்பந்து வீர்ர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இவர்கள் போட்டியில் அதிகம் கோல் அடிப்பது, விருதுகள் வாங்குவதுடன் அதிக சம்பளம் பெறுவதில் முதல் இடத்திற்கும் போட்டியிட்டு வருகிறார்கள்.

கடந்த சீசனினில் கிறிஸ்டியானோ ரொனால்டா 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்சி 76.5 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சீசனில் சம்பளம், போனஸ் மற்றும் கமர்ஷியல் வருமானம் ஆகியவற்றின் மூலம் மெஸ்சி 126 மில்லியன் யூரோக்கள் (1021.19 கோடி ரூபாய்) பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர் மைதானத்தில் களம் இறங்கி விளையாடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 25 ஆயிரம் யூரோ (ரூ. 20,26,175) சம்பளமாக பெறுகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 94 மில்லியன் யூரோ (761.84 கோடி ரூபாய்) பெற்று 2-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் மூன்றாம் இடத்தை நெய்மர் 81.5 மில்லியன் யூரோ (660.53 கோடி ரூபாய்) பெற்றுள்ளார்
இந்த தகவலை பிரான்ஸ் புட்பால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்