போதையில் நிலைதடுமாறி இளம் பெண்கள் – தூக்கிச் சென்ற கோப்பாய் பொலிஸ் – அதிர்ச்சியில் யாழ்ப்பாணம்!

மது போதையில் விபத்துக்குள்ளான இரு இளம் பெண்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் நடந்துள்ளது.

21 மற்றும் 25 வயதுடையவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களை மக்கள் மீட்டபோது இருவரும் நிலை தடுமாறியவாறு இருந்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்