பக்தனிடம் வரம் கேட்கும் கடவுள் – யாழ்ப்பாணத்தில் நடந்த அதிசயம்!

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் ஆரம்பிக்கப்பட்ட ‘முன்னோக்கி நகர்வோம்’ செயல் திட்டத்துக்கு முதலாவது முறைப்பாட்டை வடக்கு மாகாண ஆளுநர் குரே வழங்கியுள்ளார்.

ஈ.பி.டி.பியுடன் தொடர்புடைய காணி விவகாரத்தையே அவர் தனது முறைப்பாடாக வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, காணி உரிமையாளரின் அனுமதியின்றி வைத்துள்ளதாக தெரிவித்தே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்சிறிதர் தியேட்டருக்கு வருபவர்களின் வாகனத் தரிப்பிடமாக அந்தக் காணியைப் பயன்படுத்துகிறார். அதனை மீட்டுத் தாருங்கள்’ என்று ஆளுநரிடம் காணி உரிமையாளரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

அந்த முறைப்பாட்டையே ஆளுநர், முன்னோக்கி நகர்வோம் அமைப்பிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண சபையில் எதிர்கட்சித் தலைவராக உள்ள தவராசாவிடம், அவருக்கு மாகாணசபை உறுப்பினர் பதிவி வழங்கிய கட்சியின் செயலருக்கு எதிரான முறைப்பாட்டை ஆளுநர் முதலாவதாக கையளித்துள்ளமையானது வடக்கின் அதிகாரங்களில் அதிக சக்திவாய்ந்தவராக காணப்படம் ஆழுநரே முறைப்பாடு செய்தமையானது குறித்த கடவுளே சென்று பக்தனிடம் வரம் கேட்பதாக அமைந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்வதை காணமுடிகின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்