யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அசமந்தம் : நோயாளர் அவதி – கண்டுகொள்ளாத பணிப்பாளர்!

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அவசர தேவையுடைய நோயாளர்களைக் கூட வைத்தியர்கள் பாராமுகமாக இருப்பதால் நோயாளர்கள் பெரும் அவல நிலையை எதிர்கொண்டுவருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது வடபகுதியின் அதிகளவான மக்களது நோய்களுக்கு நிவாரணம் வழங்கும் முக்கிய இடமாக விளங்குவது யாழ் போதனா வைத்தியசாலை. அதுமட்டுமல்லாது மருத்துவபீட மாணவர்களின் கற்றலுக்கும் அவர்களது தேடலுக்குமான களத்தையும் அது வழங்கிவருகின்றது.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் வைத்தியர்களும் தமது சேவையை நாடிவரும் நோயாளர்கள் மீது அக்கறையோ அவதானமோ செலுத்துவது குறைவு என்றும் இதனால் பல சாதாரண நோயாளர்களாக இருந்தவர்கள் கூட பாரியளவிலான நோய்களின் தாக்கம்  அதிகரிப்பு காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர் முதல் இயல்பாக உருவாகும் நோய்களாலும் முறிவுகள் மற்றும் வைரஸ் தாக்கங்கள் காரணமாகவும் பலர் நாளாந்தம் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தமது நோய்களுக்கு தீர்வை தேடி யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றால் அங்குள்ள வைத்தியர்கள்முதல் தாதியர்கள் மட்டுமல்லாது சாதாரண சிற்றூழியர்களும் தமது தனிப்பட்ட தேவைப்பாடுகளை மட்டுமே மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தொலைபேசியில் உரையாடுவதும் முகநூல் பாவனையுடனும்தான் தமது கடமை நேரத்தினை கழிக்கின்றனர் என தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தமது நோய் குறித்து குறித்த தரப்பினரிடம் தெரிவித்தாலும் அதனை கருத்தில் கொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான யாழ் போதனா வைத்தியசாலையின் அசமத்தனங்களை பணிப்பாளர் மட்டத்திற்கு கொண்டுசென்றாலும் அது தீர்க்கப்படாது காணப்படுவதாகவும்  குறித்த வைத்தியசாலை ஊழியர்களது அசமந்தத்தனங்களுக்கு பணிப்பாளரும் ஒத்துழைப்பதாக தெரிவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்