முள்ளிவாய்க்கால் கொடூரத்தை தனது பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதினார் முல்லைத்தீவு மாணவர் ஒருவர்.

முல்லைத்தீவு மாணவன் ஒருவர் முள்ளிவாய்க்காலின் கொடிய நினைவுகளை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ளார்.
நேற்றைய தினம் ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடத்தில் இரட்டைகிழவி குறித்த மாணவர்களுக்க கற்பித்த அவற்றினை உபயோகித்தி வாக்கியம் எழுதுமாறு பயிற்சியளித்த போது மாணவர் ஒருவர் இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுகளை தன் குறிப்பில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

முள்ளிவாய்க்காலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன என்றும் இராணுவத்தினர் பெண்களை தறதற என்று இழுத்தனர் என்றும் எனது மனம் படபட என்று அடித்தது என்றும் அந்த மாணவர் தன் பாடக் குறிப்புப் புத்தகத்தில் எழுதியுள்ளார். தரம் ஒன்பதில் கல்வி கற்கும் இந்த மாணவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது ஐந்து வயதுடைய குழந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கத.

குறித்த ஆசிரியர் இது குறித்து தெரிவிக்கையில் இத்தகைய நிகழ்வொன்றை சாதாரணமான வகுப்பறைச் செயற்பாடாக தன்னால் கடந்து செல்ல முடியவில்லை என்று குறித்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்