இந்திய இராணுவத்தளபதி இன்று ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் பிபின் ராவட் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சநதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
இந்தச்சந்திப்பின் போது ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிடடுள்ளார்.
மேலும் இந்திய இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இருநாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்

தீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகே’; சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்