டெஸ்ட் போட்டிகளில் சுழற்சி முறை நீக்கம்

டெஸ்ட் போட்டிகளில் நாணயச்சுழற்சி முறை நீக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மெல்பர்ன் மைதானத்தில் கடந்த 1877ம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது நாணயச்சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெறும் நாடுகளை சேர்ந்த அணிகள் தமக்கு ஏற்றவாறு மைதான ஆடுகளத்தை தயார் படுத்திக்கொள்வதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும் இதன் காரணமாக இதன் காரணமாக, 2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆ’ஸ் போட்டி தொடரின் போது நாணய சுழற்சி முறையினை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இந்த நாணயச்சுழற்சி முறை நீக்கம் தொடர்பில் ஐசிசி கிரிக்கட் குழு எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் தீர்மானமொன்றிக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் ஐசிசியின் தலைமை நடுவரான ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்