இலங்கையில் புலிகள் மீண்டும் அதிரடித் தாக்குதல்: ஆட்டம் கண்டது அரசு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் சைபர் தாக்குதலால்ஷ 300இற்கும் மேற்பட்ட இலங்கை அரச இணையத்தளங்களுக்கள் ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இலங்கை தூதுவராலயங்கள் இணையத்தளங்கள், இலங்கை அரச நிர்வாக இணையங்கள் மற்றும் இலங்கை அரச செய்தி ஊடக இணையங்கள் உள்ளிட்ட 300இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முடக்கப்பட்ட குறித்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுபோல கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியும் 200இற்கும் மேற்பட்ட இவ்வாறு முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமேரிக்காவை ஆட்டம்காண வைத்துக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் இலங்கை அரசையும் கதிகலங்க வைத்திருக்கின்றது என தற்போது இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்