கோர விபத்தில் பலியானார் யாழ். இளைஞன்

பரந்தன் பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞன் உயிரிழந்துளளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

குறித்த நபர் வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

 

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்