கேரளாவில் நிபா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கேரள மாநிலம்த்திலுள்ள கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வெளவால்களினால் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகின்றமை குறிப்பிட்த்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸானது, அந்த மாநிலத்தை மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
அண்மையில் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்படட போதும் அவை பலனின்றி அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்