துப்பாக்கி பிரயோகத்தால் பிரபல கிரிக்கட் வீரரின் தந்தை உயிரிழப்பு..!

இரத்மலானை – ஞானானந்த வீதியில் நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப்பிரடீயாகம் காரணமாக இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

63 வயதுடைய தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினரான கே.ரஞ்சன்டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க வி;டயம் ஆகும்.

இச்சந்தர்ப்பத்தில் காயமடைந்தள்ள இருவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை அறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தந்தையின் உயிரிழப்பை அடுத்து, எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாட செல்லும் இலங்கை அணியில், தனஞ்சய டி சில்வா பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்