கனடாவில் ரொரண்டோ மாகாணத்தின் மிசிஸாயுகா பகுதியில் இடம் பெற்றுள்ள இந்pய விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ள வெடிப்புச்சம்பவத்தின் போது 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக வும் அதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் இருவர் குறித்த விடுதியினுள் சென்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.