தேரர் மீதான துப்பாக்கிப்பிரயோகத்தில் கோட்டாவுக்கும் பங்கு – சிங்கள ஊடகம்?

கதிர் காமத்தில் கிரிவெஹெர விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பங்கு உண்டு என பிரபல சிங்கள ஊடகம் ஒன்று அதிர்ச்சித்தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கோத்தபாயவின் தேவைக்கு அமைய இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலுமு; தெரிவித்துள்ளது.
கதிர்காமத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் வீட்டின் நிர்மாணிப்பு தொடர்பில் தம்மிந்த தேர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளமை தொடர்பிலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க் விடயம் ஆகும்.

குறித்த துப்பாக்கிசசூட்டில் படுகாய மடைந்த கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

எனினும் இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் விகாரையின் முன்னாள் பூசாரி என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர நேற்றிரவு தெரிவித்திருந்தார்.

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்