இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் தீக்குளிக்க முயற்சி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விஜய் (எ) அஜய்குமார் (30) என்பவரே இவ்வாறு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பொலிஸார், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்து காப்பாற்றியமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இது தொடர்பாக அவர் பொலிசாருக்க வளங்கியுள்ள வாக்கு மூலத்தில்
நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். அப்போது முதல் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன்.

எனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல விரும்புவதாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் என்னை அனுப்பிவைக்கவில்லை.

இதனால், கடந்த 2015 -இல் கள்ளப்படகில் இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு செல்ல முயன்றேன். அப்போது, கியூ பிரிவு பொலிஸார் என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

எனது வழக்கை விசாரித்த இராமேசுவரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கவில்லை.

மண்டபம் அகதிகள் முகாமிலும், மின்சாரம், குடிநீர் வசதி போதுமான அளவில் இல்லை. இதனாலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்