இலங்கை பரீட்சைத்திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

இலங்கை பரீட்சை தணைக்களத்தினால் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.

தற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை ஆயின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்: 011-2785230

தொலைநகல் இலக்கம் : 011-2784232

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்