காலவரையறை இன்றி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் மூடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்கிழக்கு பதிவாளர் எச்.அப்துல் சத்தார் குறிப்பிடுகையில் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பெரும்பாலான மாணவர்கள் தென் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடையே புதுவித வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஏனைய மாணவர்களுக்கு பரவும் முன்னர் தொழில்நுட்ப பீடத்தை மூடுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பீடம் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கமைய, பல்கலைக்கழக பொது சுகாதார பரிசோதகர்கள், விடுதி நிர்வாகக் குழுவினர் அனைவரும் இணைந்து மாணவர்களின் விடுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்