மாலத்தீவின் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு!

மாலத்தீவு முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூமுக்கு 19 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை மமூன் அப்துல் கயூமின் ஆட்சி மாலத்தீவில் நடைபெற்றது.

இவர் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் உறவினர் ஆவார். மமூன் அப்துல் கயூம் யமீன் அரசை கவிழ்க்க முயற்சி செய்தமை தொடர்பிலேN இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்லிடப்பேசியை ஒப்படைக்காத காரணத்தால் அவருக்கு மாலத்தீவு நீதிமன்றம் ஒரு வருடம், 7 மாதம், 6 நாள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்