புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல – சுவிஸ் நீதிமன்று அதிரடி தீர்ப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் தற்போது அதிரடித் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நிதி சேகரித்தது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுவிஸ் நீதிமன்றில் நடைபெற்றுவந்த நிலையில் அதன் இறுதி வழக்கு விசாரணை இன்றையதினம் நடைபெற்றது.  இதன்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அபராதமும் வழங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸர்லாந்தில் புலிகளின் ஆதரவாளர்களால் சட்டவிரோதமான நிதி சேகரிக்கப்பட்டது தவறானது என தெரிவித்து சுவிஷ் அரசால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்