வேலணை மத்திய கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை – காரணம் தெரியாது திண்டாடும் பொலிஸார்!

வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு வேலணை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி மலசல கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

வேலணை மத்திய கல்லூரியில்  தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன்(வயது 14) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது –

குறித்த மாணவனின் தாயார் எற்கனவே இவ்வாறான ஒரு சம்பவத்தில் இறந்துள்ளதாகவும்  நேற்றைய தினம் குறித்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்