புனித ரமழான் தினத்தை அவமதித்ததா வடக்கு மாகாண கல்வி அமைச்சு – விரக்தியில் ஆசிரியர்கள்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின்  திட்டமிடப்படாத நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தல் காரணமாக வடமாகாண ஆங்கில ஆசிரியர்கள் பெரும் குழப்ப நிலையடைந்த சம்பவமொன்று இன்றையதினம் நடைபெற்றது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது –

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஆங்கில ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று 15.06.2018 காலை 8.30 தொடக்கம் 4.30 வரை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த செயலமர்வு நடைபெறமாட்டாது எனவும் அது நாளை காலை 16.06.2018 நடைபெறும் எனவும் சகல வலயங்களுக்கும் 14.06.2018 பி.ப. 2 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சென்றடையாமையால் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள ஆங்கில ஆசிரியர்கள் குறித்த செயலமர்விற்காக இன்றையதினம் மருதனார்மடம் இராமநாதன் கல்லாரிக்கு வந்து ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இன்றைய தினம் புனித றம்ழான் தினம் அனுஸ்டிக்கப்படுவது தெரிந்திருந்தும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையே குறித்த குழப்ப நிலைக்க்கு காரணம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்